100 சிறு கதைகளும் காப்புரிமை மீறய 2 ‘திருடர்களும்’ — சிறுகதை

முன்குறிப்பு – நான் (தமிழ்) புத்தகங்களை (வாங்கி) படிக்காத, தமிழ் படங்களையும், பாடல்களையும் இணையம் மூலமாகத் தரவிறக்கி மட்டுமே ஜீரணிப்பவன். நான் காப்புரிமையின் அளவுகடந்த வணிகப்பாதுகாப்பை கடுமையாக எதிர்ப்பவன். நான் காப்புரிமை ‘திருடன்’ என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளாதவன். (Pirate is not a thief) அறிவுசார் சமூகம் அமைவதற்கான பெரிய தடைகளில் ஒன்று காப்புரிமை என்பது என் கருத்து. சென்ஷி என்ற பெயரை நேற்று வரை கேள்விப்பட்டதில்லை. எஸ்.ராமகிருஷ்ணன் விஜய் தொலைகாட்சியில் சிறப்பு விருந்தினராக வரும் எழுத்தாளர் என்றளவே தெரியும். ஆகையால் தமிழ் எழுத்தாளர்கள் சண்டை / அரசியிலுக்கு என்னைக் அழைக்காதீர்கள்.

காப்புரிமை / Creative Commons பற்றி  @nchokkan, @tshrinivasan னிடம் சில பல கீச்சு விவாதங்களும், டிவிட்லாங்கர்களுக்கு (1, 2) பிறகு இப்பதிவையிடுகிறேன்.

நிகழ்வுகள் (இப்பதிவை இவ்விவகாரம் பற்றி அறியாமல் படிப்பவர்களுக்காக)
1. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் 100 ‘சிறந்த’ சிறுகதைகளின் பட்டியலொன்றை வெளியிட்டார்.
2. 100 சிறுகதைகளுக்கும் பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இதழ்கள், புத்தகங்களில் பதிப்பித்தமையால் பலருக்கும் அக்கதைகளுக்கு அணுக்கம் இல்லை.
3. சென்ஷி என்பவர் இக்கதைகளைத் தேடி, மின்மயமாக்கி இணையத்தில் ஈராண்டுகளாக வெளியிட்டு வந்துள்ளார். சென்ஷி இப்பட்டியலை உருவாக்கிய எஸ்.ரா விற்கும் இக்கதைகளின் மின்வடிவை அனுப்பியுள்ளார்.
4. எஸ்.ரா இந்நூறு கதாசிறியர்களிடம் கேட்டு(பதிப்பாளரின் இணைய பதிவு படி) ஒரு புத்தகம் பிரசுரிக்க முடிவெடுத்தனர். ஆனால் பதிப்பாளர்கள் சென்ஷி பகிர்ந்த கோப்பை பயன்படுத்திவிட்டனர்.
5. சென்ஷி ஆதரவாளர்கள் அவரின் உழைப்பு தகுந்த முறையில் அங்கீகறிக்கப் படவில்லை என்றும் எஸ். ரா தொகுப்பாளர் அல்ல என்று எஸ்.ரா மீது குற்றம் சாட்டியுள்ளனர். pdf கோப்பை இணையத்திலும் வெளியிட்டுள்ளனர்.

காப்புரிமை மீறல்கள் — IANAL — நான் வழக்குரைஞரல்ல, ஆயினும் என் பார்வையில் —

1. காப்புரிமை சட்டத்தின்படி, எஸ். ரா வெளியிட்ட 100 கதைகளின் பட்டியல் மட்டுமே காப்புரிமைக்குரியது. இப்பட்டியலை  ‘எஸ்.ரா வின் 100 சிறந்த சிறுகதைகள்’ என தலைப்பிட்டு ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வெளியிட்டால் கூட அது காப்புரிமை மீறல்.

Copyright in a list may exist in the content of the list or in the way that the content was selected and arranged. Copyright does not protect facts, but it does protect opinion. If a source is based on “value judgments”, it may be protected by copyright, even if it looks very similar to fact. And even if the source is fact, copyright may still protect its selection and arrangement if these are creative. (மூலம் : விக்க்ப்பீடியா, CC-BY-SA 3.0)

ஆக அந்த 100 கதைகளின் பட்டியலை எஸ்.ரா தவிற வேறுயாரும் வெளியிட முடியாது. நான் படித்த 100 கதைகள் என்று ஒரு பட்டியலை என்னால் வெளியிடமுடியாது. வெளியிட்டால் அது காப்புரிமை மீறல். (என்ன கொடுமை சரவணன் இது! )

2. 100 கதைகளின் காப்புரிமை அதன் எழுத்தாளர்களோ / அதை வெளியிட்ட இதழ்கள் / பதிப்பகங்களுடையது. எவ்வளவு அரும்பாடுபட்டு சென்ஷி இதனை தேடி, தொகுத்து, மின்மயமாக்கினாலும் (உரிமையாளர்களின் வாய்மொழி ஆசியிருந்தாலும்) அந்த கோப்பு ‘காப்புரிமை’ மீறிய ஒரு கோப்பு. அதற்கு அவர் என் ‘உழைப்பு’ இதில் உள்ளது என கூறிக்கொண்டு காப்புரிமை கொண்டாடமுடியாது.

3. அச்சு வடிவில் வெளியாகும் புத்தகத்தின் மின்மூலம் சென்ஷி (உரிமையில்லாமல்) வெளியிட்ட கோப்புகள். உரையாடலுக்காக சென்ஷிக்கு சொந்தம் என வைத்துக்கொண்டாலும், இது பொய் சொல்லப் போறோம் கதை மாதிரி திருடனிடமிருந்து சொத்தின் உண்மையான உரிமையாளரின் அனுமதியுடன் திருடுவது. சட்டப்படி உரிமை திருடனிடம் இல்லாததால் எஸ்.ரா / பதிப்பகம் சட்டப்படி திருடவில்லை. ஆனால் ஒழுக்கம் சார்ந்து பார்த்தால் அதுவும் திருட்டு தான்.

அ. சென்ஷி நல்ல ஆக்கங்களுக்கு பலருக்கும் அணுக்கம் தர வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைத்திருந்தாலும் அவர் ‘திருடர்’.
ஆ. இணையமில்லாதவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று அதே நல்ல நோக்கத்துடன் (வணிகமும் கலந்து) எஸ்.ரா அதனை புத்தகமாக வெளியிட்டால், அதற்கு சென்ஷிக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அவரும் திருடர்.

இரு ‘திருடர்களுக்குள்’ யார் தொகுப்பாசிரியர் என்ற சண்டை நகைச்சுவைக்குரியது. இருவரும் நல்ல எண்ணங்கள் கொண்ட நல்ல மனிதர்கள். காப்புரிமை என்ற அபத்தமான சட்டத்தினுள் திருடியவன் ‘திருடனில்லை’, ‘திருடாதவன்’ திருடன். ஆனால் உண்மையில் அனைவருமே ‘திருடிய’ நல்லவர்கள். ஆயினும் நாம் சட்டத்தை இருக்கி பிடித்துக்கொண்டு நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதில் எவ்வளவு இன்பம்.

— ‘காப்புரிமை’ Sundakka CC-BY

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s